புனித அந்தோனியார் கல்லூரி
ஊர்காவற்றுறை
image004 (7K)

பரிசளிப்பு தினம் 2005 / 2006

10.07.2007 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணி

பிரதம விருந்தினர்
திரு.பொன் பாலசுந்தரம்பிள்ளை

புவியற்துறை வாழ்நாள் போராசிரியர் முன்னைநாள் துணைவேந்தர் யாழ் பல்கலைக் கழகம்

திருமதி இராஜலட்சுமி பாலசுந்தரம்பிள்ளை

தலைவர்

அருள்திரு ஜே.ஏ.ஜேசுதாஸ்

அதிபர்

நிகழ்ச்சி நிரல்

 • பிரதம விருந்தினரை பாண்ட் வாத்திய இசையுடன் அழைத்துவரல்
 • பாடசாலைக் கொடி ஏற்றுதலும் க{தம் இசைத்தலும்
 • உத்தியோகஸ்தர் அறிமுகம்
 • வரவேற்பு நடனம்
 • மங்கள விளக்கேற்றுதல்
 • இறைவணக்கம்
 • வரவேற்புப்பாடல்
 • அதிபர் அறிக்கை
 • பிரதம விருந்தினர் உரை
 • பரிசில்கள் வழங்கல்
 • கலைநிகழ்ச்சி நாட்டுக் கூத்து-பண்டாரவன்னியன்
 • நன்றியுரை
 • தமிழ்த் தாய் வாழ்த்து

வரவேற்பு நடனம்

வருக வருக வருகவே
வாழ்த்துகின்றோம் வருகவே
வண்ண மலர் மாலை சூடி
வரவேற்போம் வருகவே (வருக வருக)

தீவகம் பெற்றெடுத்த சுந்தரனே - எங்கள்
கலைக்கூடம் சிறக்கவந்த தலைமகனே (2)
அவர் துணை தேர்ந்த அன்னை லஷ்மியே- உம்மை
அன்புடன் இங்கு நாம் வரவேற்போம் வருகவே

அந்தோனி குடும்பத்தின் முதல்மகனே - எங்கள்
தேவையில் சேவகனாய் வாழ்பவரே (2)
ஜேசுவுடை தாசனாய் இருப்பவரே - உம்மை
இன்முகத்தோடு நாம் வரவேற்றோம் வருகவே

பெற்றோர் பெரியோரே சோதரரே - இங்கு
பெருமகிழ்வோடு வரும் ஆர்வலரே (2)
நற்றுணையாகி நிற்கும் நல்லவரே - உம்மை
நர்த்தனம் புரிந்து நாமும் வரவேற்றோம் வருகவே.

இறைவணக்கம்

இறைவணக்கம் இனிதாய்ப்பாடி
இறைவா உம்பெயர் புகழ்கின்றோம்
சங்கமமாகி சபைதனில்வாரும்
சரணம் சரணம் இறைவனே (2)

உலகாழும் இறைவா உறவாடவருவாய் - எம்
உணர்வோடு இன்றும் அவைதனில் அமர்வாய்
சக்தியும் நீயே
சாந்தியும் நீயே 2
சரணம் சரணம் திருவடி சரணம்
உலகம் அமைதிபெற உண்மை உயர்வு பெற
விரைவாய் வருவாய் பரமனே
எமது பணி சிறக்க கல்லூரி உயர்வடைய
வரம் பல அருள்வாய் வேந்தனே

காக காக பகரிக ரிகரி ரிரிஸா
ரீரி ரீரி கரிஸக ரிஸ கரிஸா
ஸா ஸா ஷ ககாக மமாம பபாப
ஸாஸ ரீரி ஸரிஸா ஸாரி ஸரிஸா

இருளினை அகற்றி ஒளியினை ஏற்ற - எம்
இகயத்திற் கென்றும் மெய்ஞானம் தருவாய்
வழியும் ந{யே
வாழ்வும் ந{யே 2
சரணம் சரணம் உனதடி சரணம்
உலகம் அமைதிபெற உண்மை உயர்வு பெற
விரைவாய் வருவாய் பரமனே
எமது பணி சிறக்க கல்லூரி உயர்வடைய
வரம் பல அருள்வாய் வேந்தனே

வரவேற்புப்பாடல்

இராகமாலிகை

இராகம் : சிந்தோளம்

அந்தோனிகுடும்பத்தின் பரிசில் நாளாம்
சிறப்போடு நாமெல்லாம் மகிழும் திருநாளாம்

புவியியல் புயலாம் சுந்தரவதனனே
பாலசுந்தரம் ஐயா அம்மணி அதிதியே

இராகம் : கானடா

தீவகம் பெற்ற சுந்தர வதனன்
அந்தோனிகல்லூரி அற்புத மாணவன்
புவியியல் துறையின் புத்தொளி வீசிடும் -முன்னாள்
பல்கலை வேந்தரே வருக வருகவே

இராகம் : சண்முகப்பிரியா

பண்பினில் ராஜ லக்ஸ்மியாகியே
கல்வியை வழங்கிய வித்தகி அன்னையே
பலநலம் பெற்று பாங்காய் வாழ்ந்திடும்
சுந்தரன் பத்தினி வருக வருகவே

இராகம் : பந்துவராளி

அந்தோனி குடும்பத்தின் அமுத சுரபியே
யேசுவின் தாசனே இனிய முதல்வனே
கல்வி கலையோடு ஆன்ம{க அமுதத்தை
அள்ளி வழங்கிடும் வள்ளளே வருகவே

இராகம் : மத்தியமாவதி

கல்விஅதிகாரிகளே - பெற்றோர்களே நம்
பமையமாணவரே பண்புசால் பெரியோரே
நல்வரவ சொல்லி நமஸ்காரம் செய்தே
வருக வருகவென வாழ்த்தி வரவேற்கின்றோம்

2005 ம் 2006 ம் ஆண்டுகளிற்கான அதிபரின் அறிக்கை

கடந்த இரண்டு ஆண்டுகளிற்கான பரிசளிப்பு விழாவினை சிறப்பிக்க வருகை தந்துள்ள எமது பிரதம விருந்தினர், புவியியற்துறை வாழ்நாள் பேராசிரியர், பொ. பாலசுந்தரம்பிள்ளை அவர்களே, அவர்தம் பாரியார் அவர்களே, த{வக மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அதீத அக்கறையுடன் உழைத்து வரும் எமது வலயக் கல்விப்பணிப்பாளர் அவர்களே ,
ஊhகாவற்றுறை கோட்டக் கல்விப் பணிப்பாளர் அவர்களே,
பிரதிக்கல்விப்பணிப்பாளர்களே, உதவிக் கல்விப் பணிப்பாளர்களே,
ஆசிரிய ஆலோசகர்களே,


அருட்தந்தையர்களே, அருட்சகோதரிகளே
அயற்பாடசாலைகளின் அதிபர்களே, ஆசிரியர்களே
பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்களே
பழைய மாணவர் சங்க உறுப்பினர்களே
பெற்றோர்களே, நலன் விரும்பிகளே
எனது அன்பான ஆசிரியர்களே கல்விசாரா ஊழியர்களே
அன்புநிறை மாணவச் செல்வங்களே
உங்கள் அனைவருக்கும் இனிய வணக்கம் கூறி அன்புடன் வரவேற்கின்றேன்.

பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய சாதனை ஆண்டான 2005 ற்குரியதும்; பல சவால்களுக்கு முகம்கொடுத்த ஆண்டான 2006 ற்குரியதுமான ஆண்டறிக்கையினை வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

2005 ம் ஆண்டிற்கான பரிசளிப்புத் தினத்தை சென்ற ஆண்டு துர்அதிஸ்ட விதமாக நடாத்த முடியாமல் போனதைதையிட்டு எனது மனவருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எமது இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினராக இங்கு மேடையை அலங்கரித்திருக்கும் புவியியற் துறையின் வாழ்நாள் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை அவர்கள் எமது த{வக மண்ணின் மைந்தனும் எமது கல்லூரியின் பழைய மாணவருமாவார். நீங்கள் கற்ற இக்கல்லூரியை பெருமையுடன் எடுத்துக் கூறிவருவதும் இன்றை தினம் எம்மத்தியில் பிரசன்னமாகியிருப்பதும் எமது கல்லூரியின் புகழையும் பெருமையையும் பறை சாற்றுவதாகவேயுள்ளது.

Prize giving photos added.

The students and staff at St Antony's College celebrated their college day on the 10th July 2007. Prof.P.Balasundrampillai who was the former Vice Chacellor of the University of Jaffna and an alumni of the school was the chief guest for the day. Some highlights of the day are seen in the photos.

> > > PHOTOS

வாழ்நாள் பேராசிரியராக இருக்கும் தாங்கள் கரம்பொன் சண்முகநாத மகா வித்தியாலயத்திலே ஆரம்பக்கல்வியை பயின்று பின் எமது கல்லூரியிலே இடைநிலைக் கல்வியை 1950-54 காலப்பகுதியில் கற்று பின் யாழ் இந்துக் கல்லூரியில் இணைந்து கொண்டீர்கள். 1961-65 காலப்பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினையும் 1969-72 காலப்பகுதியில் டேகாம் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப்பட்டத்தை; நிறைவு செய்து புவியிற்துறையில் விரிவுரையாளராக, பேராசிரியராக, வருகைநிலை பேராசிரியராக, துறைத் தலைவராக, பிடாதிபதியாக இங்கும் வெளிநாடுகளிலும் பல்வேறு பல்கலைக் கழகங்களிலும் சேவையாற்றிப் பின் யாழ்பல்கலைக்கழகத்திலே துணை வேந்தராகி இரண்டுமுறை இப்பதவியை 1993-2000 ம் ஆண்டு காலப்பகுதியில் வகித்துள்ள{ர்கள். இதைத்தவிர பல பல்கலைக் கழகங்களினால் வழங்கப்பட்ட பல கௌரவப் பட்டங்களையும் பெற்றுள்ளீர்கள்

யாழ் பல்கலைக் கழகத்தில் பல உயர் குழுக்களிற்கு தலைமைவகித்த தாங்கள், பல பயனுள்ள திட்டங்களைத் த{ட்டி புதிய பல பயிற்சி நெறிகளை ஆரம்பித்து சிறந்ததோர் கல்விமானாகத் திகழ்ந்த{ர்கள். ஓய்வு வயதிற்கே தவிர சேவைக்;கல்ல என்றாற் போல் கல்விப் புலத்திற்கு வெளியே மீளக்குடியமர்தலுக்கும் புனர்வாழ்விற்குமான அதிகாரசபை, சமாதானத்திற்கும் நல்லெண்ணத் திற்குமான சபை போன்றவற்றில் தங்கள் தலைமைத்துவ சேவையை வழங்கி அகில இலங்கை சமாதான நீதிவானாகவும் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றீர்கள்.

திருமதி இராஜலக்ஸ்மி பாலசுந்தரம்பிள்ளை அவர்களே, சிறந்த ஆசிரியராக சேவையாற்றி ஓய்வுபெற்ற தாங்கள் அன்பான அன்னையாக, கனிவுநிறை துணைவியாகவிருந்து அறிவுநிறை பிள்ளைகளை உருவாக்கிய நல்லாசான் என்ற வகையில் எங்கள் மத்தியில் இருப்பதில் மகிழ்ச்சியடைவ{ர்கள் என்பதில் ஐயமில்லை.

கல்வியையும் விளையாட்டையும் இரு கண்களாகக் கருதும் எமது கல்லூரி இரண்டு விடயங்களிலும் சாதனை படைத்த ஆண்டாக 2005 திகழ்கின்றது. க.பொ.த உயர்தரத்தில் செல்வி தெ.துஸ்யந்தினி எல்லாப் பாடங்களிலும் திறமைச்சித்தி (3A) பெற்று பல்கலைக்கழகம் சென்றமையும் எமது உடற் பயிற்சி அணி உடற்பயிற்சிப் போட்டியில் தேசிய மட்டத்தில் 2ம் இடம் பெற்றமையும் இவற்றில் குறிப்பிடத் தக்கவையாகும். இவர்களை இவ்விடத்தில் மனமாரப் பாராட்டுவதோடு இவர்களின் வெற்றிக்கு வழிசமைத்துக் கொடுத்த ஆசிரியர்களிற்கும் பயிற்றுவிப்பாளருக்கும் எமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்;.

மாணவர் விபரம் 2005 ல் 405 ஆக இருந்த மாணவர் தொகை 2006 ல் 444 ஆக அதிகரித்தது. எனினும் இவ்வாண்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக 50 க்கும் அதிகாமான மாணவர்கள் சொந்த ஊரையும் கல்லூரியையும் விட்டு வெளியேற வேண்டியதாயிற்று.

கிறிஸ்துஇல்ல விடுதியில் 2005 ல் 67 மாணவர்கள் தங்கி கல்விகற்று வந்தனர் 2006 ல் இது 90 அதிகரித்திருந்தது. எனது தனிமுயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட இவ்விடுதிக்கு யாழ் ஆயர் அவர்களிடமிருந்தும் உறவினர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் போன்றவற் றிடமிருந்தும் உதவிகளைப் பெற்று; நிரந்தர இரண்டு மாடிக்கட்டடம் ஒன்றை அமைக்கும் பணி 2006ல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் இவ்விடத்தில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்தும் உங்கள் உதவியை எதிர்பார்த்திருக்கின்றோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆசிரிய ஆளணி

ஒப்ப{ட்டளவில் 2005, 2006 ல் பல புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்த போதிலும் சில பாட ஆசிரியர்களிற்கு தொடர்ந்தும் பற்றாக்குறை உள்ளது.

2005ன் ஆரம்பத்தில் 23 ஆசிரியர்கள் சேவையாற்றி வந்தனர். தை முதல் ஐப்பசிவரையான காலத்தில் 10 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு ந{ண்டகாலமாக இருந்த ஆசிரியர் பற்றாக்குறை ஓரளவு த{ர்;கப்பட்டது எனினும் அதே காலப்பகுதியில் 4 ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுச்செல்ல ஒரு ஆசிரியர் பல்கலைக்கழகத்தில் தனது கற்கை நெறியினை தொடர கற்கை விடுமுறையில் சென்றார். புதிதாக நியமனம் பெற்றவர்களில் 04 பேர் பட்டதாரிகள் 02 பேர் கல்விக் கல்லூரி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஏனையோர் தராதரப்பத்திரமற்ற ஆசிரியர்கள்.

2006 ஆரம்பத்தில் 28 ஆசிரியர்கள் சேவையாற்றிய போதும் அவ்வரு டத்தில் 08 ஆசிரியர்கள் பல்வேறு காரணங்களால் படசாலையி லிருந்து விலக வேண்டியதாயிற்று. இவர்களில் ஒருவர் திருமணத்தின் பின் வெளிநாடு செல்ல இருவர்; ஆசிரிய கலாசாலைக்கும் இருவர் தற்காலிக இடமாற்றத்திலும் 03 பேர் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றும் சென்றனர். வருட முடிவில் ஆசிரியர் தொகை 20 ஆயிற்று.

தினம்தோறும் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்து பிரயாணம் மேற் கொண்டு கற்பித்து வரும் ஆசிரியர்களை நன்றியுடன் இவ்விடத்தில் நினைவு கூருகின்றேன். சாதாரணமாக அரை மணிநேரத்தில் கடக்கவேண்டிய தூரத்தை ஒன்றரை மணிநேரம் செலவழித்து கடக்கவேண்டியிருப்பது ஒன்றே அவர்களின் பிரயாண கஸ்டத்தினை எடுத்துக் காட்டும் சுட்டியாகும்.

கல்வி அபிவிருத்தி

மாணவர் கல்வி அபிவிருத்தியின் சுட்டியாக விளங்கும் க.பொ.த சா த மற்றும் உயர்தர பெறுபேறுகளில் சிறந்த முன்னேற்றம் காணப்பட்டுள்ளமையை சிறப்பாக குறிப்பிட முடியும். 2005 ல் கா.பொ.த சாதாரண தரப்பா{ட்சைக்குத் தோற்றியோரில் 49 வ{தமானோர் உயர்தரத்தில் கல்வி கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். உயர்தரப்பா{ட்சையில் 2005ல் தோற்றியோரில் 67 வ{தமானோர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதிபெற்றுள்ளதோடு 3யு சிறந்த பெறு பேறாகவுமுள்ளது. 2006 ல் கா.பொ.த சாதாரணதரப்பா{ட்சைக்குத் தோற்றியோரில் 54 வ{தமானோர் உயர்தரத்திற்கு சித்திபெற்றுள்ளனர். 2006 ல் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியோரில் 69 வ{தமானோர் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதிபெற்றுள்ளனர்;.

2006 ல் கணனி கற்கை நிலயம் (CLC) திறந்து வைக்கப்பட்டபின்னர் அனைத்து மாணவர்களுக்கும் அடிப்படைக் கணனிப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இப்பிரதேசத்திலுள்ள உள்ள மாணவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.

கா.பொ.த சாதாரண மாணவர்களுக்கான விசேட செயற்திட்டங்கள் 2005 ம் 2006 ம் ஆண்டுகளில் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இது மாணவர் கல்வி முன்னேற்றத்தில் செல்வாக்குச் செலுத்தும் ஓர் காரணியாகவுமுள்ளது. 12 மாணவர்கள் வலயக்கல்வி அலுவலகத்தினால் வழங்கப்பட்டு வரும் புலமைப்பரிசில்களினால் பயன்பெற்று வருகின்றனர்.

அஞ்சலிகள்

2006 ம் ஆண்டு ஆவணி மாதம் 11 ம் திகதி தீவுப்பகதிகளில் திடீரென ஆரம்பமான மோதல்கள் எமது கல்லூரிச் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. எமது கல்லூரி மாணவன் செல்வன் திருவிளங்கம் கஜேந்திரன் மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற எறிகணை வீச்சுக்களில் காயப்பட்டு உயிரிழந்தார். அதே தினத்தில் அல்லைப்பிட்டியில் 2004 ல் க.பொ.த சா.தரத்தில் தோற்றிய மாணவன் செல்வன் சலமன் மொறிஸ் அமலதாஸ் உயிரிழந்தார். ஊர்காவற்றுறையில் 14.10.2006 ல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தரம் 10 மாணவன் செல்வன் அல்பிறட் சாள்ஸ் உயிரிழந்தார். எமது கல்லூரியின் பழையமாணவன் டானியல் குயின்ரனியும் இக்காலத்தில் உயிரிழந்தார். எமது கல்லூரி மாணவன் நித்திய நிரஞ்சனின் தந்தை எமிலியானுஸ் மற்றும் த.சபேசனின் தந்தை தவசீலனும் வெவ்வேறு சம்பவங்களில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்தனர். இவர்கள் அனைவருக்கும் எமது இதய அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

பிரிவுபசாரம் கடந்தசில வருடங்களாக எமது கல்லூரியிலே கடைமைபுரிந்து பின் மாற்றலாகிச் சென்ற திரு.சி.எல்டபிள்யு.பற்றிக், திருமதி பாரதிதாசன், செல்வி. யோ.கந்தையா, செல்வி.கே.சின்னத்தம்பி,; ஆகியோரின் சேவையைப்பாராட்டி பிரிவுபசாரவிழா 2005 ல் நடைபெற்றது.

பௌதீக வள அபிவிருத்தி

கணணி கற்கை நிலயம்

பௌதீக வள அபிவிருத்தியில் அதிக வளங்களைப் பெற்றுக் கொண்ட ஆண்டுகளாக அறிக்கைக்குரிய ஆண்டுகள் திகழ்கின்றன, நூலகம் மற்றும் விஞ்ஞான ஆய்வுகூடம் என்பவற்றை சிறப்பாக குறிப்பிடலாம். இவற்றில் கணணிகற்கை நிலயம் 2005 ஆனி 13 ல் அத்திவாரம் இடப்பட்டு 23-11-2006 ல் எமது கோட்டக் கல்விப் பணிப்பாளர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதற்குரிய கணணிகள் பொருத்தப்பட்டிருப்பினும் உரிய தளபாடங்களும் சில கருவிகளும் போக்குவரத்துப் பிரச்சனை காரணமாக வந்து சேராதுள்ளது. இதற்கென தனியான தொலைபேசி இணைப்பைப் பெற்றுக் கொள்ளும் முயற்சி இதுவரை பயனளிக்கவில்லை.

நூலகம்

நூலகம் அமைப்பதற்குத் தேவையான நிதி ஒதுக்க{ட்டில் அரைவாசியினை 2006 ல் திணைக்களம் ஒதுக்கியிருந்த போதும் கட்டிடப் பொருட்களின் தட்டுப்பாட்டினால் அத்திவாரமட்டம் வரையான வேலையையே செய்துமுடிக்கக் கூடியதாகவிருந்தது.

விஞ்ஞான ஆய்வு கூடம்

விஞ்ஞான ஆய்வு கூடத்திற்காக கேள்விப்பத்திரம் கோரப்பட்டபோது ஒப்பந்த காரர் எவரும் பொருட்தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் காரணமாக இவ்வேலைக்கு விண்ணப்பிக்காத நிலையில் இந்நிதி திரும்பிச்செல்லும் நிலையேற்பட்டது. இந்நிலையில் நாம் சில ஒப்பந்தக்காரர்களிடம் கலந்துரையாடி கேட்டுக்கொண்டதற்கிணங்க இவ்வேலை ஆரம்பிக் கப்பட்டு அத்திவாரமட்டம் வரை கட்டப்பட்டு கட்டிடப் பொருட்களின் தட்டுப்பாட்டினால் வேலை தடைப்பட்டுள்ளது.

போட்டோ பிரதி இயந்திரம்

எமது கல்லூரியின் அவசர தேவைகளில் ஒன்றான போட்டோ பிரதி இயந்திரத்தினை பெற்றுக் கொள்வதற்காக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஸ்னன் அவர்கள் நாம் வேண்டிக் கொண்டதற்கிணங்க தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தின் க{ழ் அதற்கான நிதியை ஒதுக்கியிருந்தார். அந்நிதியிலிருந்து ஜப்பசி 2006 ல் போட்டோ பிரதி இயந்திரத்தினைக் கொள்வனவு செய்துள்ளோம்;. அவருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மதிய உணவு

உலக உணவுத்திட்டத்தின் க{ழ் தரம் 6 - 9 மாணவர்களிற்கு மதிய உணவு வழங்கும் திட்டம் 2004 மார்கழி தொடக்கம் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. 2005, 2006ம் ஆண்டுகளில் பல்வேறு வழிகளில் இடையுறுகள் எற்பட்ட போதிலும் இத்திட்டத்தை ச{ராக அமுல்படுத்தி வருவதோடு பழைய மாணவர் சங்கங்களின் உதவியோடு தரம் 10- 13 மாணவர்களுக்கும் தொடர்ந்தும் அமுல்படுத்தி வருகின்றோம்;. வறுமைக் கோட்டின்க{ழ் வாழும் பெரும்பான்மையான மாணவர்கள் உள்ள எமது கல்லூரிக்கு இத்திட்டம் உண்மையிலேயே மிகவும் பயனுள்ள திட்டம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மைதான அபிவிருத்தி

பல முக்கிய விளையாட்டு நிகழ்வுகளின் மையமாக இருக்கும் எமது கல்லுரியின் மைதான அபிவிருத்தி தொடர்பாக ந{ண்டகாலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 2000 ஆண்டளவில் உதவி அரசாங்க அதிபரினால் இத்திட்டத்திற்காக வழங்கப்படுவதாக ஒதுக்கப்பட்ட காணியில் பல நோக்குக் கூட்டுறவுச்சங்கத்தினரிற்காக ஒதுக்கப்பட்ட நிலம் தவிர்ந்த ஏனய பகுதி நில அளவைத்திணைக்களத்தினால் அளக்கப்பட்டு 400 ம{ற்றர் ஓடுபாதை அமைக்கக்கூடியவாறு எல்லைகள் குறிக்கப்பட்டுள்ளதுடன் 2005ம் 2006 ம் ஆண்டுகளில் தற்போதய உதவி அரசாங்க அதிபரின் ஒத்துழைப்போடு வேலைக்கான உணவுத்திட்டத்தின் க{ழ் ஓரளவிற்கு மண் நிரப்பப்பட்டள்ளது. இதன் ப+ரண அபிவிருத்திக்காக நாம் இன்னும் ந{ண்டதூரம் செல்ல வேண்டியுள்ளது. இதற்காக நாம் பலரின் உதவியையும் நாடி நிற்கின்றோம்.

பரிசளிப்பு தினம்

2004ம் ஆண்டிற்கான பரிசளிப்பு தினம் 23.06.2005 அன்று சிறப்பாக் நடைபெற்றது. முன்னைநாள் மாகாணக்கல்விப் பணிப்பாளர் செல்வி திலகவதி பெரியதம்பி பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.

மன்றங்கள்

எமது கல்லுரியில் தொடர்ந்து இயங்கிவரும் உயர்தர மாணவர் மன்றம், கத்தோலிக்க மாணவர் மன்றம், இந்து மாணவர் மன்றம், சாரணியம், சென் ஜோண்ஸ் அம்புலன்ஸ் போன்றவை தொடர்ந்தும் மாணவர் ஆளுமை விருத்தியிலும் சேவை செய்வதிலும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றன. இவை முறையே உயர்தர மாணவர் ஒன்றுகூடல், ஒளிவிழா, சரஸ்வதி ப+சை போன்ற முக்கிய நிகழ்வுகளை உரிய ஆண்டுகளில் சிறப்பாக நடத்தியிருந்தன. எமது சுற்றாடலை சிறந்தமுறையில் பேணவும் மாணவரிடம் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவுமென 2005 ல் சுற்றாடல் குழு எமது கல்லுரியில் அமைக்கப்பட்டு சிறப்பாக இயங்கி வருகின்றது.

விளையாட்டு

விளையாட்டுத் துறையின் நன்மைகளை நன்கு அறிந்த கல்லூரி என்ற வகையில் அதற்குரித்தான இடத்தை சிறப்பாக பேணிவருகின்றது.

உடற்பயிற்சி

எமது உடற்பயிற்சி அணி அயராத முயற்சியுடன் பயிற்சியில் ஈடுபட்டு 2005 ம் ஆண்டில் வலயம் , மாவட்டம், மாகாணம் என முன்னேறி தேசிய மட்டத் திற்குச் சென்று இரண்டாம் இடத்தைப் பெற்றமை உண்மையிலேயே எமது கல்லூரிக்கு பெருமை தேடித்தந்த சாதனையாகும.; இதற்காக கடுமையாக உழைத்த எமது அணியை விசேடமாக பாராட்டுவதில் மகிழ்ச்சிய டைகின்றேன்.
இந்த அணியைப் பயிற்றுவிப்பதில் ஆர்வத்துடன் ஈடுபட்ட எமது பழைய மாணவன் திரு.மெடோன் அவர்களிற்கும் ஏனைய பொறுப்பாசிரிpயர்களிற்கும் எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 2006 இலும் நாம் மாகாணமட்டம் சென்று முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்ட போதிலும் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக தேசிய மட்டத்தில் பங்குபற்ற முடியாமல் போயிற்று.

மெய்வல்லுனர் போட்டிகள்

2005 ம் ஆண்டு மாசி 25 ல் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியின் பிரதம விருந்தினராக எமது வலயக் கல்விப்பணிப்பாளர், அவர்கள் கலந்து சிறப்பித்தார். அந்த வருடத்தில் எமது கல்லூரி வலய மட்டத்தில் 185 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றதோடு பல மாணவர்கள் மாவட்ட மட்ட போட்டிகளிலும் பங்கு பற்றினர். 2006 ல் எமது உதவி அரசாங்க அதிபர் திரு.சிறிமோகனன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இந்த ஆண்டிலும் நாம் முதலாம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பெரு விளையாட்டுக்கள.;

உதைபந்தாட்டம்;, கரப்பந்தாட்டம் மற்றும் கிறிக்கெட் போன்ற விளையாட் டுக்களிலும் எமது அணிகள் சிறப்புடன் விளையாடி வருதோடு மாவட்ட மட்டத்தில் பல இடங்களையும் பெற்றுள்ளன.

உள்ளக விளையாட்டுக்கள்

உள்ளக விளையாட்டுக்களில் பட்மின்ரன் மற்றம் செஸ் போன்றவற்றில் இவ்வருடமும் மாவட்டமட்டத்திற்கு சென்று பங்குபற்ற எமது அணிகள் தகுதி பெற்றிருந்தமையையும் இங்கு சிறப்பாக குறிப்பிட வேண்டும்.

பழைய மாணவர் சங்கங்கள்

பல்வேறு நாடுகளில் வசித்துவரும் எமது பழைய மாணவர் சங்கங்கள் எமக்கு பல வழிகளிலும் உதவிகள் புரிந்து வருகின்றனர். கனடாவில் இயங்கிவரும் பழைய மாணவர் சங்கம் (Kayts St.Antony’s College Alumini association, Canada) வருடாந்தம் நடைபெற்று வரும் பரிசளிப்பு தினத்திற்காக பதக்கங்க ளையும் கேடயங்களை வழங்கிவருவதோடு பாடசாலை அபிவிருத்திச் சங்க த்தின் அன்றாட செயற்பாடுகளிற்கான நிதி உதவிகளையும் வழங்கிவருகின்றது. எமது மாணவர்களிற்கென இவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட பாவித்த கணனிகள் போக்குவரத்து இன்மையினால் கொழும்பில் தேங்கிப் போயிற்று.

2005 ம் ஆண்டில் புதிப்பிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்காக லண்டனில் இருந்து இயங்கி வரும் பழைய மாணவர் சங்கம் (St.Antony’s College Kayts Alumini Association Europe) வருடாவருடம் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்குத் தேவையான நிதியுதவிகளைச் செய்து வருகின்றது.

தென்னிலங்கையில் செயற்படும் சங்கமும் (St.Antony’s College, Past Pupils’ Association, South Ceylon Branch) அவ்வப்போது இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றது. இவர்களினால் யாழ் ஆயருடாக அன்பளிப்புச் செய்யப்பட்ட காணியிலேயே கணணி கற்கை நிலையமும் நூலகமும் அமைந்துள்ளமை இ;ங்கு சிறப்பாக குறிப்பிடப்பட வேண்டும்.

ஊர்காவற்றுறையில் இயங்கிவரும் தாய்ச்சங்கமும் (St.Antony’s College Old Boys Association) இயன்ற உதவிகளை செய்து வருகின்றது. ஆசிரிய தினம் மற்றும் பரிசளிப்பு தினம்போன்றவற்றிற்கு அன்பளிப்புகளை வழங்கி ஊக்குவித்து வருகின்றது. கல்லூரிதினத்தில் இவர்கள் எம்மோடு இணைந்து ஒன்றுகூடி இத்தினத்தை சிறப்பிப்பது ஓர் சிறப்பம்சமாகும்

இதைத் தவிர தனிப்பட்ட முறையிலும் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் பல உதவிகளை செய்துவருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நன்றிகள்

அறிக்கைக்குரிய இரண்டு ஆண்டுகளிலும் மாணவர் கல்வியிலும் கல்லூரி வளங்களிலும் பல முன்னேற்றங்களிற்கு உந்து சக்தியாகவிருந்து செயற்பட்ட அனைத்த நெஞ்சங்களுக்கும் எனது பராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வதோடு இன்றயதினம் இங்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்டு விழாவைச்சிறப்பித்த வாழ்நாள் பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்னை அவர்களுக்கும் அவரது பாரியார் அவர்கட்கும் ஏனய விருந்தினர்களுக்கும் எனது மனமாhந்த நன்றிகளைக் கூறி இவ்வறிக்கையினை நிறைவு செய்கின்றேன். நன்றி , வணக்கம்.

தமிழ் தாய் வாழ்த்து

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே

ஏழ்கடல் வைப்பிலுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே

எங்கள் தழிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
என்றென்றும் வாழியவே

சூழ்கலி ந{ங்க தமிழ்மொழி ஓங்க
துலங்குக வையகமே

தொல்லை வினைதரு தொல்லையகன்று
சுடர்க தமிழ்நாடே

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
வாழ்க தமிழ்மொழியே

வானம் அறிந்த தனைத்து மறிந்து
வளர்மொழி வாழியவே.


St Antony's College Kayts Alumni Association of Europe (SACKAAEU)
EMAIL: sackaaeu@yahoo.co.uk

Registered as a Charity in England and Wales
Registered Charity Number: 1106466